தமிழ்நாடு

சென்னை மழை: `பாதுகாப்பாக இருக்கிறேன்' வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்களது நிலை குறித்த தகவல்களை வெளி உலகுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய வசதி

IANS

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்களது நிலை குறித்த தகவல்களை வெளி உலகுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தாங்கள் பத்திரமாக இருப்பது குறித்து  `I am safe' என்ற பட்டனை அழுத்தி, வெளி உலகுக்கு தெரிவிக்கலாம்.

இதன் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது நெருங்கிய சொந்தங்கள், நண்பர்களுக்கு தங்களது தற்போதைய நிலை குறித்து தெரியப்படுத்தலாம். மேலும், நான் மழை வெள்ளப்பகுதியில் இல்லை என்ற தகவலையும் வெளி உலகுக்கு தெரியப்படுத்தலாம்.

பேஸ்புக் கடந்த அக்டோபர் 2014 இந்த வசதியை அறிமுகப்படுத்தியது. இயற்கை பேரழிவின் போது பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்களது நிலை குறித்து வெளி உலகுக்கு தெரிவிப்பதற்காக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயல்படுத்தப்பட்டது. சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதிகள் தாக்கப்பட்டபோது இந்த வசதி செயல்படுத்தப்பட்டது.

சென்னை மாநகரில் கொட்டி தீர்த்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT